நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிகேணி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனை வளாகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசின் காவல் துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது . எச்.ராஜா, எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுத்தது ஏன் ? என கேள்வி எழுப்பினார். மேலும் அறநிலையத்துறை அதிகாரிகள் வீட்டு பெண்களை தரக்குறைவாக பேசிய எச்.ராஜாவை தமிழக காவல்துறை கைது செய்யவில்லை. நக்கீரன் கோபால் கைது. சர்வாதிகார நாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நக்கீரன் கோபாலை விடுதலை செய்யாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும் ஆளுநர் நேரம் கொடுத்தால் நக்கீரன் கோபால் விவகாரம் குறித்து பேசுவோம் எனத் தெரிவித்தார்.
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yak0YR
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment