Monday, October 1, 2018

பெருந்தலைவவர் காமராஜரின் 43 வது நினைவு தினம் இன்று

பெருந்தலைவர் காமராஜரின் 43 ஆம் ஆண்டு  நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

தமிழக மக்களால்  கர்ம வீரர் என்றும் பெருந்தலைவர் என்றும் போற்றப்படும் காமராஜர், கடந்த 1954 -ஆம் ஆண்டு முதல் 1963 வரை சுமார் 9 ஆண்டு காலம் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்.

மகாத்மா காந்தியின் பெருந்தொண்டரான காமராஜர் தனது 9 ஆண்டு கால ஆட்சியின்போது தமிழ்நாட்டுக்காக செய்த சாதனைகள் நூறு ஆண்டுகள் பேசும் அளவுக்கு தொலைநோக்கு பார்வையில் செயல்டுத்தியவை.

குறிப்பாக கல்வித்துறைக்கு செய்த அவர் சாதனைகள் எண்ணிலடங்காதவை, உயர்ந்தோர் தாழ்ந்தோர் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் கல்வி கற்க 30,000க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடங்கினார்.

இலவச மதிய உணவுத் திட்டம், மாணவர்களுக்கு சீருடை , இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றை செயல்படுத்தினார்.  கல்வித்துறையைப்போல தொழில் துறை மற்றும் வேளாண்துறை சிறக்கவும் பல்வேறு திட்டங்களை செல்படுத்தினார்.  

பல புது புது தொழிற்சாலைகள் நிறுவி மக்களின் பசி, பஞ்சம் போக்க வழிவகை செய்தார். அவர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட நெய்வேலி நிலக்கரி திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை, திருச்சி பாரதி ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ், ஏராளமான அணைகள், மேட்டூர்  காகிதத் தொழிற்சாலை, மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம் என அவரது சாதனைப்பட்டியல் மிகவும் பெரியவை. 

தமிழக முதலமைச்சர் பதவி,தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவி என அதிகாரமிக்க பதவிகளில் இருந்தாலும், அவர் தமக்காக எந்த சொத்தையும் சேர்க்காமல் தான் காலமானார்.

மக்கள் சேவையே பெரிது என்று அவர் வாழ்ந்ததால் தான் இன்றும் மக்கள் அவரை போற்றுகிறார்கள்.

Classic Right sidebar தமிழகம், Tamilnadu, கர்ம வீரர் காமராஜர், Kamarajar, Karma Veerar தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2P72o6F
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment