Monday, October 8, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  தொடர்பாக 20 அமைப்புகள் மீது வழக்கு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்த சம்பவம் தொடர்பாக 20 அமைப்புகள் மீது சிபிஐ  அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தமிழக அரசு அமைத்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்னும்  தாக்கல் செய்யப்படவில்லை. 

இந்நிலையில் துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பாணர்ஜி , தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 20 அமைப்புகள் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

Classic Right sidebar தூத்துக்குடி, துப்பாக்கிச் சூடு, ஸ்டெர்லைட் போராட்டம், Sterlite Protest, thoothukdi, Gun Shooting தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2C2ZUlP
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment