Monday, October 1, 2018

ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தின் 16-வது சுற்று - ஹாமில்டன் முதலிடம்

ரஷ்யாவில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார்பந்தயத்தின் 16-வது சுற்றில் சக வீரர் போட்டாஸ் (Bottas) விட்டுக்கொடுத்ததால், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்தார்.

நடப்பு சீசனுக்கான ஃபார்முலா ஒன் கார்பந்தயம் பல்வேறு நாடுகளில் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. இதன் 16-வது சுற்றானது ரஷ்யாவின் சோச்சி நகரில் 309.745 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடத்தப்பட்டது. 10அணிகளைச் சேர்ந்த வீரர்கள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றனர். இதில், நடப்பு சாம்பியனும் மெர்சிடஸ் அணி வீரருமான இங்கிலாந்தின் ஹாமில்டன், ஒருமணி நேரம் 27 நிமிடங்கள் 25 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடம் பிடித்தார். இந்த சீசனில் ஹாமில்டன் பெற்ற 8-வது வெற்றியாக இது அமைந்தது.

போட்டியின்போது, மெர்சிடஸ் அணி வீரரான போட்டாஸ் (Bottas) முன்னிலையில் இருந்தார். இருவரும் ஒரே அணி என்பதால், சாம்பியன் பட்டத்தை ஹாமில்டன் நெருங்கிவிட்டதாலும், அவர் ஒதுங்கிவிட்டார். அவரின் உதவியால்தான் ஹாமில்டன் முதலிடத்தை பிடித்தார் என்பது 
குறிப்பிடத்தக்கது.

Classic Right sidebar ஃபார்முலா ஒன், ரஷ்யா, ஹாமில்டன், Bottas, சாம்பியன், இங்கிலாந்துவீரர் விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QoTSjB
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment