Thursday, September 10, 2020

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைந்து, விடுதலையாவது அதிகரிப்பு: மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகரிது கொண்டிருக்கிறது: மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைகிறது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஒரு கொலை வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கூறுகையில், எந்த குற்ற வழக்கின் விசாரணையாக இருப்பினும் ஒரு தலைபட்சமாக விசாரணை நடைபெறக்கூடாது. விசாரணை நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமல் நடக்க வேண்டும். நியாயமான விசாரணை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிமையாகும். உண்மையை வெளிக்கொண்டு வருவது தான் விசாரணையின் நோக்கம் ஆகும். தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் சிறப்பான நற்பெயர் இருக்கிறது. அதற்கு பங்கம் வர அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டில் குற்றவியல் வழக்குகளில் விசாரணை தரம் வெகுவாக குறைந்து வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குன்றியும், விடுதலையாவது அதிகரித்துக்கொண்டும் வருகிறது.இந்தச்செயல் தொடருமேயானால், பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை இழக்க கூடும். குற்ற வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள், புலன் விசாரணை செய்யக்கூடிய அளவிற்கு போதிய நிபுணத்துவம் பெற்றுள்ளனரா என்று கேள்வி எழுப்பியதுடன், இது பற்றி உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.

ஒரு கொலை வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலமுருகன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கூறுகையில், எந்த குற்ற வழக்கின் விசாரணையாக இருப்பினும் ஒரு தலைபட்சமாக விசாரணை நடைபெறக்கூடாது. விசாரணை நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமல் நடக்க வேண்டும். நியாயமான விசாரணை என்பது அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிமையாகும். உண்மையை வெளிக்கொண்டு வருவது தான் விசாரணையின் நோக்கம் ஆகும்.

தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் சிறப்பான நற்பெயர் இருக்கிறது. அதற்கு பங்கம் வர அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாட்டில் குற்றவியல் வழக்குகளில் விசாரணை தரம் வெகுவாக குறைந்து வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குன்றியும், விடுதலையாவது அதிகரித்துக்கொண்டும் வருகிறது.இந்தச்செயல் தொடருமேயானால், பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை இழக்க கூடும். குற்ற வழக்குகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள், புலன் விசாரணை செய்யக்கூடிய அளவிற்கு போதிய நிபுணத்துவம் பெற்றுள்ளனரா என்று கேள்வி எழுப்பியதுடன், இது பற்றி உள்துறை செயலர் மற்றும் டி.ஜி.பி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்கள்.

Reduction of convictions and increase in release: Madras High Court Madurai Branch

The post குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைந்து, விடுதலையாவது அதிகரிப்பு: மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளை appeared first on Tamil Siragugal: Tamil News blog .



from Tamil Siragugal: Tamil News blog https://ift.tt/3bLeWfT
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment