Tuesday, July 23, 2019

நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை கடுமையாக தாக்கியது.கஜா புயலால் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். விவசாய நிலங்களும் நாசமாயின. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பில் உரிய நிவாரணம் தரப்படவில்லை. இதனால் உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த பலர் போராடினார்கள் .போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தினர்.போராட்டம் நடத்திய 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னையை சேர்ந்த ராஜேந்திரன், ரங்கசாமி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிவாரணம் கேட்டு மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.ஆனால் காவல்துறை வாகனங்களை தாக்கியதாக 60 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

The post நிவாரணம் கேட்டு மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2SvYzdy
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment