திருமண உறவை மீறிய உறவு அதிகரிக்க சின்னத்திரை தொடர் மற்றும் சினிமா தான் காரணமாக இருக்கிறதா என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருமண உறவை மீறிய உறவு வழக்கில் தன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை எதிர்த்து அஜீத் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு, அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
திருமண உறவை மீறிய உறவு அதிகரிக்க சின்னத்திரை சீரியல்களும், சினிமாவும் காரணமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். . மேலும், ஆண் மற்றும் பெண்கள் சுயமாக பொருள் ஈட்டினாலும், இருவர் பொருளாதார உயர்வினாலும் இதுபோன்ற உறவுகள் அதிகரிக்கிறதா எனவும் பேஸ்புக், வாட்ஸ் -அப் போன்ற சமூக வலைதளங்கள் திருமண உறவை மீறிய உறவுகளை உண்டாக்க ஒரு தளத்தை ஏற்பாடு செய்கிறதா ? எனவும் கேள்வி எழுப்பினர்.
மேலும், மேற்கத்திய கலாச்சாரமும், மதுவுக்கு அடிமையாகிபோன வாழ்க்கை துணையும் இதுபோன்ற உறவுகள் உருவாக காரணமா எனவும் கூட்டுக்குடும்ப வாழ்கைமுறை காணாமல் போனதும் காரணமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
இது மட்டுமின்றி, நிச்சயிக்கப்பட்ட திருமணம் அல்லது விருப்பம் இல்லாதவரை கல்யாணம் செய்துகொள்வதால் திருமண உறவை மீறிய பந்தம் அதிகரித்துள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது போன்ற பிரச்னைக்கு முடிவுக்கு கொண்டு வர உளவியல் ரீதியான சிகிச்சை உள்ளிட்டவை வழங்குவது பற்றி தீர்மானம் செய்ய உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைக்கலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தார்கள். மேலும் இது சம்பந்தமாக ஜீன் 21 ஆம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்..
News Headline:
Extra marital affair increasing due to tv serial and Cinema ??: Madras high court
The post சின்னத்திரை சீரியல், சினிமாவின் தாக்கத்தினால் சீரழிகிறதா குடும்ப உறவு ? : சென்னை உயர் நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2XEEiVk
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment