சென்னை: பொன்னாங்கிபுரத்தை சேர்ந்தவர் நசீர் அகமது(49) சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஓன்று அளித்துள்ளார் . அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் “ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் என் மகனுக்கு எம்பிபிஎஸ் சீட்டு வாங்கி தருவதாக கூறி என்னிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் பெற்றுக்கொண்டார்.ஆனால் மருத்துவ சீட்டு வாங்கித்தராமல் ஏமாற்றிவிட்டார்.மோகன்ராஜ் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார் . அவரிடம் இருந்து பணத்தை பெற்று தாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் நடத்திய விசாரணையில் போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பன் என்பவருடன் சேர்ந்து மருத்துவ சீட்டு மற்றும் வேலை வாங்கி தருவதாகவும் பல கோடி மோசடி செய்தது தெரியவந்துள்ளது.மோகன்ராஜ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஐபிசி 419, 420, 468, 471, 506(வீ) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.போலி ஐஏஎஸ் அதிகாரி நாவப்பனுக்கு போலி அடையாள அட்டை எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்திவருகின்றனர்.மோசடி செய்த பணத்தில் நிலங்கள் மற்றும் சொகுசு கார்கள் வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
The post சென்னையில் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக மோசடி appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2Ol3fRD
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment