சென்னை :பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சம்மந்தப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மீது பொது மக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.பொள்ளாச்சியின்பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு பிறகு வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது . ஏற்கனவே திருநாவுக்கரசிடம் 4 நாட்கள் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மேலும் 3 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளியிட்ட கோவை எஸ்பி பாண்டியராஜன் மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை வெளிட்டதால் எஸ்பி மற்றும் உள்துறை செயலாளர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.உயர்நிதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் மாணவியின் பெயரை வெளியிட்ட எஸ்பி பாண்டியராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததால், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு முதலில் கீழமை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post கோவை எஸ்.பி மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2TxAdis
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment