Tuesday, March 19, 2019

இந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம்

மதுரை: 19 மார்ச் :

வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பிரத்யேகமான தேர்தல் அறிக்கை வெளியிடவேண்டும் என தேர்தல் ஆணையம் எல்லா வேட்பாளர்களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பதிலளிக்காத 9 அரசியல் கட்சிகளுக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இத்தொகை போர் விதவைகள் சங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்ற போது, அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர்த்து பெரும்பாலான ஏனைய கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிப்பதாக தெரிவித்தார்கள். இந்தியாவை சுமார் 500 குடும்பங்கள் மட்டும் தான் ஆட்சி செய்கிறது. இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? என கேள்வி எழுப்பினர். அதன்பின், நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்காத அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து செய்யும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. எனினும் அபராதத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்துவிட்டார்கள்.

The post இந்தியாவில் நடப்பது மன்னர் ஆட்சியா? மக்கள் ஆட்சியா? – உயர்நீதிமன்றம் கண்டனம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2HFdTRD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment