Tuesday, October 2, 2018

அர்ஜெண்டினா புறப்பட்டது இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணி

இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணியினர் டெல்லியில் இருந்து அர்ஜெண்டினா புறப்பட்டனர். 

அர்ஜெண்டினாவில் இளையோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் அர்ஜெண்டினா புறப்பட்ட நிலையில், இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணியினரும் அர்ஜெண்டினா புறப்பட்டனர்.

டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து புறப்பட்ட இந்திய ஹாக்கி அணியினருக்கு ஹாக்கி இந்தியா அமைப்பு வாழ்த்து தெரிவித்து உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தது. இளையோர் ஒலிம்பிக் போட்டி ஹாக்கியில் இந்திய ஆடவர், மகளிர் அணி பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

 

Classic Right sidebar அர்ஜெண்டினா, இந்தியா, ஹாக்கி அணி, India, Hockey Team விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DLOkxR
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment