Wednesday, October 10, 2018

பாரா ஆசியப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகள் ரம்யா பதக்கம் வென்று சாதனை

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி மகள் ரம்யா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 3-வது ஆசிய விளையாட்டுப்போட்டிகள் இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்று வருகிறது. மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த என்.எஸ்.ரம்யா சண்முகம் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.இதுகுறித்து பேசிய அவரது பெற்றோர்கள், ரம்யா வெள்ளி வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

1993-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி பிறந்த ரம்யா, இடது கை விரலில் குறைபாடு உடையவர். இருந்தாலும் கல்வி மீது தனக்கு இருந்த ஆர்வத்தால் பொறியியல் பட்டதாரினார். 

கல்வி மீது எந்த அளவிற்கு ஆர்வம் இருந்ததோ, அதே அளவிற்கு விளையாட்டின் மீதும் ஆர்வம் இருந்து உள்ளது. ஆரம்ப கல்வி படிக்கும்போதே அவர் காராத்தே கற்றுக்கொண்டார். பின்னர் 7-ஆம் வகுப்பு படிக்கும்போது அவரது ஆர்வத்தை பார்த்த ஆசிரியர்கள் அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஏற்பாடுகளைச் செய்தனர். 

2003-ஆம் ஆண்டு திருவாரூரில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். 2009-ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த குண்டு எறிதலில் ரம்யா தங்கம் பெற்றார். 

அதே ஆண்டில் பெங்களுரில் நடைபெற்ற உலக நாடுகள் பங்கேற்ற ஐவாஸ் போட்டியில் தட்டு எறிதலில் பங்கேற்றார். 2010-ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலகளவிலான சிபி இன்டர்நேஷனல் போட்டியிலும் முதலிடம் பெற்றுள்ளார். 

தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனைப் படைத்த ரம்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Classic Right sidebar ஆசியப்போட்டி, ரம்யா, வெள்ளிப் பதக்கம், Silver MEdal, Para Asia Game விளையாட்டு ஆசியப்போட்டி, ரம்யா, வெள்ளிப் பதக்கம், Silver Medal, Para Asia Game 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2PqoReR
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment