ஆங்கில வழி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் ஆங்கில வழி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலை கழகம் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் மாணவ மாணவிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் மாணவ மாணவிகளை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மற்ற கல்லூரி மாணவ மாணவிகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நெல்லையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலெட்சுமி கல்லூரியில் மாணவ மாணவிகள் கல்லூரி நுழைவாயில் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர் .
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் 35 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yaKHwy
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment