Wednesday, October 10, 2018

கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து, 51 பேர் உயிரிழப்பு

கென்ய பேருந்து விபத்தில், குழந்தைகள் உட்பட 51 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

52 பேர் பயணித்த பேருந்து ஒன்று, தலைநகர் நைரோபியிலிருந்து கிஸுமு நகரை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இவ்விபத்தில் சிக்கி 42 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 10 பேரில் 9 பேர் பலியானதால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.

52 பேரில் ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்துள்ள நிலையில், அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Classic Right sidebar Kenya, bus accident, கென்யா, பேருந்து விபத்து, நைரோபியா, Nairobi உலகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2A1tiYq
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment