Thursday, May 9, 2019

மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை :சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் பொறியியல் படித்து வந்தார்.அவர் படிக்கும் போது வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த வந்தார் .இவர் 2015ம் ஆண்டு கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேருக்கு எதிராக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோகுல்ராஜின் தாய் சித்ரா மனுதாக்கல் செய்தார் .அந்த மனுவில் வழக்கை சேலம் சிறப்பு நீதிமன்றம் அல்லது வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவு விட குறிப்பிட்டுள்ளது.அதுமட்டும் இல்லாமல் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜின் ஆதரவாளர்களின் மிரட்டலால் அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறி விட்டதாகவும், நாமக்கல் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நியாயமாக நடக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது .இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், நாமக்கல் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.மீண்டும் இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதி இளத்திரையன் முன்பு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதி இளத்திரையன் வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.அதுமட்டும் இல்லாமல் வழக்கை 4 மாதங்களில் விசாரித்து முடிக்கவும் நீதிபதி இளத்திரையன் உத்தரவிட்டார்.

The post மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2E12YPD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment