Friday, May 17, 2019

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

மும்பை: மகாராஷ்டிராவில் மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி நடைபெற்றது .வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கில் பெண் துறவி பிராக்யா சிங் தாகூர்,ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபத்யாய உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர்.

ஜாமினில் வெளிவந்த பிராக்யா சிங் தாகூர் நடந்துவரும் மக்களவை தேர்தலில் போபால் தொகுதியின் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.இன்று மும்பையில் உள்ள என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி விநோத் பதால்கர் முன் விசாரணைக்கு வந்தது.குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் நேரில் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இனி குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரும் வாரம் ஒருமுறை கட்டாயம் நீதிமன்றத்தில அஜராக வேண்டும் என்று நீதிபதி விநோத் பதால்கர் உத்தரவிட்டார். பிறகு வழக்கு விசாரணையை மே 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆஜராவதை தவிர்த்து வருவதற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/30tXV42
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment