Thursday, January 24, 2019

தமிழக டிஜிபி :காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த கட்டுப்பாடு மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

பணியில் உள்ள தமிழக காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி கைப்பேசி பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்தாண்டு நவம்பர் மாதத்தின் போது டிஜிபி ராஜேந்திரன் சுற்றறிக்கை ஒன்றை வெளிட்டார். அதில் அனைத்து பிரிவில் உள்ள காவல்துறையினரும் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஆறு காவலர்கள் கைப்பேசி பயன்படுத்தியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாதப்பட்டனர், மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்த பிறகு விடுவிக்கப்பட்டனர்.

டிஜிபி ராஜேந்திரன் நேற்று முன்தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து பிரிவு காவல்துறைக்கும் மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் பணியில் ஈடுபடும் காவலர்கள் கைப்பேசியை தங்கள் வசம் எடுத்து செல்லக்கூடாது ,அதை மீறினால் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு போது, போராட்டத்தின் போது ,திருவிழாவின் போது , போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியின் போது ஈடுபடும் காவலர்கள் முற்றிலும் கைபேசியை தவிர்க்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

The post தமிழக டிஜிபி :காவல்துறையினர் கைப்பேசி பயன்படுத்த கட்டுப்பாடு மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2CIgrdw
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment