Wednesday, August 26, 2020

சென்னை கோயம்பேடு சந்தையில் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் இன்று ஆய்வு

சென்னை கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தி வருவதை அடுத்து, சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சந்தையில் இன்று தகுதி ஆய்வு மேற்கொண்டனர்.

சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக கரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த மே மாதம் சந்தைக்கு சீல் வைக்கப்பட்டது. அதற்கு மாற்றாக திருமழிசை, மாதவரம், வானகரம் பகுதியில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்ட்டது. இந்த சந்தைகளில் பெரும்பாலும் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

சென்னை கோயம்பேடு சந்தை மூலமாக கரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த மே மாதம் சந்தைக்கு சீல் வைக்கப்பட்டது. அதற்கு மாற்றாக திருமழிசை, மாதவரம், வானகரம் பகுதியில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்ட்டது. இந்த சந்தைகளில் பெரும்பாலும் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், மாற்றப்பட்ட பகுதிகளில் போதிய இடவசதி இல்லாததாலும், புறநகர் பகுதியில் இருப்பதால் விற்பனை மந்தமாகவே உள்ளது எனவும் மேலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட்டுள்ளதால், சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கையினை முன்வைத்து வருகின்றனர்.

இதனிடையே இரு தினங்களுக்கு முன்பு, கோயம்பேடு சந்தையை உடனடியாக திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமியை வணிகர் சங்க மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

இதையடுத்து, சி.எம்.டி.ஏ செயலர் கார்த்திகேயன், அங்காடி நிர்வாகக் குழு அதிகாரி கோவிந்தராஜன் ஒன்று அடங்கிய குழு ஒன்று இன்று கோயம்பேடு சந்தைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது. மேலும் இதனையடுத்து சந்தையை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post சென்னை கோயம்பேடு சந்தையில் சி.எம்.டி.ஏ அதிகாரிகள் இன்று ஆய்வு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/34AJHTp
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment