சென்னை:அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு சென்னை இ.எஸ்.ஐ.சி மருத்துவ கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. ஆனால் குடியுரிமை சான்றிதழ் வழங்காததால் கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரியும் மருத்துவ கல்லூரியில் சேர்த்துக் கொள்ள உத்தரவிடக் கோரியும் அபிராமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கல்லூரியில் மாணவி அபிராமியை சேர்க்க உத்தரவிட்டார்.12 வாரங்களில் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சமர்ப்பிக்க தவறினால் அரசுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் மாணவி அபிராமி 10 லட்சம் ரூபாயை செலுத்தி மற்ற சான்றிதழ்களை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.
The post அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி அபிராமிக்கு குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2LYgZDj
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment