Saturday, August 10, 2019

தமிழக அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அடையாறில் அமைந்து உள்ள செயின்ட் பேட்ரிக் பள்ளி செயின்ட் பேட்ரிக் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.கடந்த 2005-ம் ஆண்டு பள்ளிக்கு அருகாமையில் இருந்த அரசுக்கு சொந்தமான 5.25 ஏக்கர் நிலத்தை சிவில் நீதிமன்றம் மூலம் நிலத்திற்கான உரிமையை பெற்றது.இந்த வழக்கில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து நிலத்திற்கான உரிமையை பெற்றதாக கூறப்படுகிறது.கடந்த 2013-ம் ஆண்டு பள்ளி நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட நிலத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. ஆனால் பட்டா வழங்க சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி மறுத்துவிட்டார்.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பள்ளி நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.வி கார்த்திகேயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை சிவில் நீதிமன்றம் முழுமையாக விசாரணை செய்யாமல்,ஆதாரங்களையும் ஆராயாமல் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.சிவில் நீதிமன்ற உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர்.மேலும் தமிழக அரசு சட்டப்படி செயின்ட் பேட்ரிக் பள்ளி மீது நடவடிக்கை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post தமிழக அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் செயின்ட் பேட்ரிக் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2H0G3FD
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment