டெல்லி : மேற்குவங்க மாநிலத்தில் நோயாளி இறந்ததால் 2 பயிற்சி மருத்துவர்கள் தாக்கப்பட்டனர்.இதனால் இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலையை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மாநில மத்திய உறுதி செய்ய வேண்டும் என்று போராட்டத்தின் போது மருத்துவர்கள் கோரிக்கையை வைத்துள்ளனர்.வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..இந்த மனுவை அவசரமாக விசாரிக்க இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்யகாந்த் அடங்கிய அமர்வு இன்று மனுவை பரிசீலித்தது. நீதிபதிகள் மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவித்தனர்.இந்த போராட்டத்தால் பல நோயாளிகள் இறந்தது குறிப்பிடத்தக்கது.
The post உச்சநீதிமன்றத்தில் அரசு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரிய மனு நாளை விசாரணை வருகிறது appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2WM2weF
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment