சினிமா நடிகைகள் நயன்தாரா அல்லது அனுஷ்கா காணாமல் போனால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?. சாதரணமான மனிதர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காதா? என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
19 வயது மகள் காணவில்லை என புகார்
சேலம் மாவட்டத்தை சார்ந்த திருமதி.மகேஸ்வரி என்பவர், கடந்த பிப்ரவரி 14 ஆம் நாள் தனது 19 வயது மகள் காணவில்லை என திருசெங்கோடு புறநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை மகேஸ்வரி தாக்கல் செய்தார்.
நீதிஅரசர்கள் கிருபாகரன், மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணை
அந்த மனுவில், தனது மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வழக்கு நீதிஅரசர்கள் கிருபாகரன், மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நான்கு மாதத்திற்கு முன் அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது ?. நீதியரசர்கள் கேள்வி
மனு சம்பந்தமாக மேற்படி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளதாகவும் மேலும் மனுபற்றிய விவரங்கள் கிடைக்கபெறவில்லை என்றும் அரசங்க தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார். நான்கு மாதத்திற்கு முன் அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதியரசர்கள், சாதாரண மக்கள் புகார் அளித்தால் காவல்துறை நடவடிக்கைகள் இப்படி தான் இருக்குமா? என வினவினர்.
காவல்துறையின் உறவினர்கள் காணாமல் போனால் இதேபோல்தான் எடுத்து கொள்வார்களா ?
நான்கு மாதங்களாக காணாமல் போன இளம் பெண்ணை மீட்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனை தருவதாகக் குறிப்பிட்ட நீதியரசர்கள், சம்பந்தப்பட்ட காவல்துறையின் உறவினர்கள் அல்லது அவர்கள் வீட்டில் யாராவது காணாமல் போனால் இதேபோல்தான் சாதாரணமாக எடுத்து கொள்வார்களா ? என்றும் கேட்டார்கள்.
சினிமா நடிகைகள் நயன்தாரா அல்லது அனுஷ்கா போன்றோர் போனதாக புகார் வந்தால் மட்டும் தான் காவல் துறை செயல்படுமா ? என்றும் கேள்வி எழுப்பினார்கள். வாங்கும் சம்பளத்திற்கு அரசாங்க அதிகாரிகள் உண்மையுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதியரசர்கள், இல்லை என்றால் அதற்குண்டான பலன்களை அவர்கள் அனுபவிப்பார்கள் என எச்சரித்தனர்.
இளம்பெண் காணாமல் போன புகார் சம்பந்தமாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது, விசாரனையின் தற்போதைய நிலவரம் சம்பந்தமான விபரங்களை அறிக்கையாக வருகின்ற திங்கட்கிழமை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதியரசர்கள், விசாரணையை அன்றைய நாளில் ஒத்திவைத்தார்கள்.
News headlines in English :
Will police take a legal action only of Cinema actress Nayanthara or Anushka is missing ?. If Ordinary person disappeared , will you not take any steps ?. Madras High Court questions Police department.
Appalled over the absence of any legal provision in the statute books requiring the police to register complaints regarding adults and children who go missing and consequently take steps to trace them, the Madras High Court on Thursday directed the Centre as well as State government to spell out how the lacunae can be rectified.
A Division Bench of Justices N. Kirubakaran and Abdul Quddhose wondered how the police, for all these years, had been booking First Information Reports (FIRs) for ‘man missing,’ ‘woman missing,’ ‘boy missing,’ and ‘girl missing’ when there was no provision under the Code of Criminal Procedure (Cr.PC) for registering such cases.
The judges raised the questions during the hearing of a habeas corpus petition filed by an aged woman whose college going daughter had eloped with her uncle, despite him being married already, and intended to live with him. The petitioner wanted the police to register a case on her complaint and bring back her daughter.
During the course of hearing of the case, lawyers present in the court hall brought it to the notice of the judges that the Cr.PC mandates the police to register FIRs only if any cognisable offence, either under the Indian Penal Code (IPC) or other criminal laws of the country, had been made out in the complaints lodged before them.
Therefore, if there was a specific allegation of abduction or kidnapping of a person or a child, the police have no other go but to register FIRs under the relevant provisions of law. However, if a complaint was related to missing or eloping of a person, no law enjoins it upon the police to book a case and trace out the whereabouts of the missing person.
In his submissions, Assistant Solicitor General G. Karthikeyan told the court that apart from Section 154 of Cr.PC which imposes a statutory obligation on the police to book cases for cognisable offences, another provision – Section 174 requires police to inquire into deaths, including suicides, that had occurred in suspicious circumstances.
The ASG suggested that this provision could be amended to make it mandatory for the police to book FIRs even on complaints related to a person who had gone missing. After recording his submissions, the judges suo motu included the Union Home Ministry as well as Law Ministry as respondents to the case and posed 11 questions to them.
They wanted to know by when the lawmakers would carry out the necessary amendments to the Cr.PC. Further, impleading the Director General of Police too as a party to the case, they directed him to furnish the number of man missing and woman missing cases booked in the last 10 years and the number of persons who had been traced out.
Also deprecating the practice of police issuing Community Service Register (CSR) receipts before registering FIRs, the judges said, such a practice has no sanction of law. The Cr.PC requires the police to book FIRs directly if a complaint makes out a cognisable offence and there was no provision regarding maintenance of CSR, they added.
In so far as the present petition was concerned, the police had issued only a CSR receipt and not booked an FIR so far though the petitioner had lodged her complaint as early as on February 14. Therefore, the judges directed the Inspector of Tiruchengode police station to be present in the court on Monday to explain the delay.
The post சினிமா நடிகைகள் காணாமல் போனால் மட்டும் தான் காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?. உயர் நீதிமன்றம் கண்டனம் appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/31BpMjl
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment