டெல்லி:கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை உண்டு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கேரள உயர் நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியருக்கு ,வருங்கால வைப்பு நிதியாக (EPF) 12% அவரின் சம்பளத்தில் இருந்தும் , 12% நிறுவனத்தின் சார்பில் இருந்தும் சேர்த்து வைக்கப்படும். நிறுவனத்தின் சார்பில் இருந்தும் 3.67% மட்டுமே வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு (EPF) அளிக்கப்படும். மீதமுள்ள 8.33% பணியாளர் ஓய்வூதியத் திட்டம் (EPS) பங்களிப்பாக வைப்பு வைக்கப்படும் . 1.9.2014-ம் தேதிக்குப் பிறகு பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தில் உறுப்பினர்களாக இல்லாதவர்களுக்கும் , புதிதாக வேலைக்குச் சேர்பவர்களுக்கும் வருங்கால வைப்புநிதி ஆணையம் 2018-ல் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை இல்லாதவர்கள் என்கிற நிபந்தனையை அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து பணியாளர்கள் சார்பில் 2018 ஆண்டில் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் 15,000 ரூபாய் வரம்புகள் எதுவும் இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஓய்வூதியம் வழங்க அடிப்படை ஊதியத்தை மட்டும் கருதாமல், ஓய்வு பெறும் கிடைக்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘வருங்கால வைப்பு நிதித் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமை உண்டு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கேரள உயர் நீதிமன்றம் அளித்த அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
The post ஓய்வூதியம் பெறுவதற்கு உச்சவரம்பு கிடையாது என்று கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog http://bit.ly/2uNHiS0
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment