Tuesday, February 26, 2019

நீதிமன்ற வளாகத்தினுள்ளே நடந்த போலி நேர்முகத்தேர்வு : சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி

செங்கல்பட்டு 27பிப்ரவரி 2019: கீழமை நீதித்துறைக்கு ஆட்களை தேர்வு செய்வதாக கூறி, நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே போலி நேர்முக தேர்வு நடைபெற்ற சம்பவம் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்திருக்கிறது.

செங்கல்பட்டு, சட்டப் பணிகள் ஆணை குழு அலுவலகத்தினுள், தாலுகா அளவிலான சட்டப் பணிகள் குழுவிற்கு இளநிலை உதவியாளர்கள் வேலைக்கு ஆள் எடுப்பதாக கூறி, போலி நேர்முகத் தேர்வுவை நடத்தியதாக கைது செய்யப்பட்ட இரண்டு பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்கள்.

இந்த ஜாமின் மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. நேர்முகத்தேர்விற்க்காக 23 நபர்களை அழைத்து வந்த திண்டுக்கல்லை சார்ந்த மணி என்பவரை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிமன்ற வளாகத்தினுள்ளேயே போலி நேர்முக தேர்வு நடந்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று நீதிபதி கூறினார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல்லை சேர்ந்த மணியை இன்னும் கைது செய்யாத போலீசாருக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

News Headline:

Madras high court Condemns Police officials for not arresting man who held fake interviews

The post நீதிமன்ற வளாகத்தினுள்ளே நடந்த போலி நேர்முகத்தேர்வு : சென்னை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி appeared first on Tamil Siragugal : Tamil News blog .



from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2GMc1qz
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment