சென்னை:திருப்பூரில் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸ் முகமது சலீம், முகமது ராபின் உசையன் உள்பட 6 பேர் முறையான அனுமதியும் இல்லாமல் திருப்பூரில் இருந்தது தெரியவந்தது.பிறகு அந்த 6 பேரையும் வேலப்பாளையம் போலீசார் பிடித்து விசாரித்து உறுதி செய்தனர் . அவர்களை வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த 6 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர் . இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘முறையான அனுமதியில்லாமல் இந்தியாவில் தங்கியுள்ள வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரும் பற்றியும் குடியுரிமை துறைக்கு தகவல் தெரிவித்து, அவர்களை சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும்.இவர்களை சிறையில் வைப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர்களை அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .இதை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
The post சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 6 பேரை நாடு கடத்த வேண்டும்- சென்னை ஐகோர்ட் appeared first on Tamil Siragugal : Tamil News blog .
from Tamil Siragugal : Tamil News blog https://ift.tt/2C8eesA
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment