Tuesday, October 9, 2018

இந்து கோவில்களை அவதூறாதாக பேசிய கிறிஸ்துவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் மீதான வழக்கு ஒத்திவைப்பு

இந்து கோவில்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பேசிய மதபோதகர் மோகன் சி.லாசரஸ் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கில் அரசு வழக்கறிஞர் விரிவான பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ்.இவர் இந்து மத கோயில்கள் குறித்து விமர்சித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது. 

இந்நிலையில், மோகன் சி. லாசரஸ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்த விவகாரம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு போலீசார் தன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தான், தவறான நோக்கத்தில் யாரையும் விமர்சித்து பேசவில்லை. எனவே, அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அவர்  வலியுறுத்தியிருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது  சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் அது குறித்த விரிவான பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கு விசாரணையை அக்டோபர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Classic Right sidebar தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Nxo4He
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment