விழுப்புரம் அருகே காதலியை சுட்டுக்கொன்று விட்டு, காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அடுத்த அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவியான சரஸ்வதியும், வேலூர் பெட்டாலியன் பிரிவில் காவலராக இருந்த கார்த்திக் வேலனும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சரஸ்வதியின் பிறந்த நாளை கொண்டாட கார்த்திக் வேலன் அன்னியூர் சென்றுள்ளார். நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலை நேரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி, கார்த்திக் வேலன் தாம் வைத்திருந்த துப்பாக்கியால், காதலி சரஸ்வதியை சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்திக் வேலனும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இருவரின் உடல்களும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்தவுடன் கார்த்திக் வேலனுடனான காதலை, தவிர்க்க சரஸ்வதி முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கொடூர சம்பவம் நடந்திருக்கலம் என சந்தேகிக்கப்படுகிறது.
Classic Right sidebar காதலியை கொன்ற காதலன், விழுப்புரம், Viluppuram தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2yvy6TF
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment