திருவாரூரில் 20 லட்சம் ரூபாய் வரதட்சனை கேட்டு மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்ய கணவன் முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர் ராஜா. இவருக்கு ஜெயநந்தினி என்ற மனைவியும், 2 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ஜெயநந்தினியிடம் 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு, அவரது கணவர் கிஷோர் ராஜா மற்றும் குடும்பத்தினர் மிரட்டி வந்துள்ளனர். ஆனால், பணமில்லை என ஜெயநந்தினி கூற தகாராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த கணவன் கிஷோர் ராஜா, தாயார் ராணி ஆகியோர், ஜெயநந்தினியை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் கிஷோர்ராஜா குடும்பத்தினர் ஜெயநந்தினி மற்றும் குழந்தை மீது மண்ணெணெய் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தப்பி பிழைத்த ஜெயநந்தினி தனது குழந்தையுடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்து வந்த திருவாரூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கணவர் கிஷோர் ராஜா உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Classic Right sidebar வரதட்சணை கொடுமை, திருவாரூர், மனைவியை கொல்ல கணவன் முயற்சி தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2C8tNkZ
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment