Tuesday, October 9, 2018

இரட்டை வேடத்தில் கலக்கும் நயன்தாரா; ஐரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நயன் தாரா கதாநாயகியாக நடிக்கும் அடுத்த படத்திற்கான தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் நயன்தாரா. கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான அறம், கோலாமாவு கோகிலா போன்ற படங்கள் வெற்றியடைந்து நல்ல வசூல் செய்தது.

 இவர் தற்போது அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தை தொடர்ந்து, 'லக்ஷ்மி','மா'  போன்ற குறும்படங்களையும், `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' படத்தையும் இயக்கிய சர்ஜுன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். `ஐரா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தில் முதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. 

Classic Right sidebar ஐரா, நயன்தாரா, சினிமா, Nayanthara, Aaira, Tamil Cinema சினிமா ஐரா, நயன்தாரா, சினிமா, Nayanthara, Aaira, Tamil Cinema 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NuqDdj
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment