கவிஞர் வைரமுத்து தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக, பின்னணி பாடகி சின்மயி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக திரைத்துறையில் உள்ள நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து சமூக வலைதளத்தில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல பாடகி சின்மயி, சிறு வயதில் தான் சந்தித்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து இரு தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து மீது புதிய குற்றச்சாட்டை பதிவிட்டுள்ளார். அதில், வைரமுத்து தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதால், திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும் கவலையில்லை எனவும் தெரிவித்துள்ளார். 5 வருடங்களுக்கு முன்பே, இதை தான் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Classic Right sidebar கவிஞர் வைரமுத்து, Vairamuthu, Sexual Harassement, Singer Chinmayi சினிமாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2Prfw6A
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment