Tuesday, October 9, 2018

தமிழக அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் திட்டம் அறிமுகம்..

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பிற்காக தமிழகத்திலேயே முதன்முறையாக தானியங்கி வருகைப் பதிவு மற்றும் பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறை, தானியங்கி வருகைப்பதிவு மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், S - Specific, M - Measurable, A - Achievable, R - Realistic,T - Timeline என்ற அப்துல்கலாம் கண்ட கனவான SMART Class திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

தானியங்கி வருகை பதிவு மூலமாக மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த, அடுத்த நொடியே பெற்றோர்களின் அலைபேசி எண்ணுக்கு "சம்மந்தப்பட்ட மாணவர் பள்ளிக்கு வந்துவிட்டார்" என தகவல் சென்றடையும் என்பதும், பள்ளி முடிந்து மாலையில் மாணவர் புறப்பட்டவுடன், பள்ளியில் இருந்து மாணவர் புறப்பட்டு விட்டார் என்ற குறுஞ்செய்தியும் பெற்றோர்களுக்கு சென்றுவிடும் என்பதும் தானியங்கி வருகைப் பதிவின் சிறப்பம்சமாகும். இந்த வசதியை செயல்படுத்திட, பெண்கள் பள்ளிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்

தானியங்கி வருகைப்பதிவு மற்றும் ஸ்மார்ட் க்ளாஸ் மூலம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரம் 
மேம்படுவதுடன், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Classic Right sidebar அரசுப்பள்ளிகள், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை, ஸ்மார்ட் வகுப்பறை தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2CBeL8r
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment