Tuesday, October 9, 2018

திருப்பதியில் இன்று முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் ஆரம்பம்...

திருப்பதி திருமலையில் இன்று முதல் 9 நாட்கள் ஏழுமலையானின் நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை திருப்பதி மலையில் ஒரே ஆண்டில் இரண்டு முறை வரும் பிரமோற்சவங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டில் 2 பிரம்மோற்சவங்கள் ஏற்பட்டுள்ளது. வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது.  நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில், பிரமோற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நேற்று மாலை திருப்பதி மலையில் நடைபெற்றது.

ஏழுமலையான் கோவிலில் பின்புறம் உள்ள வசந்த உற்சவ மண்டபத்திலிருந்து புற்று மண் எடுத்துவந்த கோவில் அர்ச்சகர்கள், அந்த மண்ணில் முளைப்பாரியிட்டனர். நவராத்திரி பிரம்மோற்சவத்தை காண அதிக அளவிலான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் தேவஸ்தான நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக திருப்பதி மலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Classic Right sidebar திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில், Tirumala Tirupati, TirumalaTemple மாநிலம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2NvFbJH
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment