மத்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் கண்டுபிடித்த சிறுதானிய ஐஸ்கிரீம், குழந்தைகள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்று வருகிறது.
தஞ்சாவூரில், இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டு வருகிறது. தொழில் முனைவோர் மற்றும் நுகர்வோரின் தேவைகளை கருத்தில் கொண்டு உணவு பதப்படுத்துதல் துறையில் பல்வேறு தொழில் நுட்பங்களையும் உணவு தயாரிப்புகளையும் உருவாக்கி வருகிறது.
கடந்த ஆண்டு தேசிய ஊட்டச்சத்து பாதுகாப்பினை மையமாக கொண்டு ஐ.ஐ.எப்.பி.டியின் இயக்குநர் அனந்த ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு பல புதிய தயாரிப்புகளை கண்டுபிடித்துள்ளது. அவற்றில் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம் சிறப்பு கண்டுபிடிப்பு.
சிறுதானிய விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு இது பெரிதும் உறுதுணையாக அமைந்திருக்கிறது. பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. பால் சாப்பிட முடியாத குழந்தைகள் மற்றும் விவசாயிகளுக்காகவும் இந்த சிறுதானிய ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் வளர்ச்சி கண்காட்சியில் பிரதமர் மோடியிடம் இச்சிறுதானிய ஐஸ்கிரீம் தொழில்நுட்பம் குறித்து விவரிக்கப்பட்டு பாராட்டினையும் பெற்றிருக்கிறது இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம். மாறிவரும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப உணவுகளும் மாற்றமடைந்து வருகின்றன. அவ்வாறு மாற்றமடைந்து வரும் உணவு பழக்க வழக்கங்கள் இயற்கை உணவுகளை சார்ந்திருந்தால் ஆரோக்கியமே...
Classic Right sidebar சிறுதானிய ஐஸ்க்ரீம், பிரதமர் மோடி, மத்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் தொழில்நுட்பம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2A2RDgr
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment