2014 மக்களவை தேர்தலில் வெற்றிப்பெற பொய்யான வாக்குறுதிகளை சொன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவில்லை, நிச்சயம் வெற்றி பெற மாட்டோம் என எண்ணினோம். அதனால், வேறுவழியின்றி பெரிய பெரிய வாக்குறுதிகளை அள்ளிவிட்டதாக கூறினார்.
தற்போது கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என மக்கள் நினைவுப்படுத்துகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நினைத்து சிரித்துவிட்டு கடந்து போவதாகவும் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் வெளிப்படையான இந்த பேச்சு வைரலாகி வருகிறது. அவரது பேச்சின் வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பகிர்ந்துள்ளார்.
Classic Right sidebar Nitin Gadkari, Union Minister, BJP, Elections, pm modi அரசியல்सही फ़रमाया, जनता भी यही सोचती है कि सरकार ने लोगों के सपनों और उनके भरोसे को अपने लोभ का शिकार बनाया है| pic.twitter.com/zhlKTrKHgU
— Rahul Gandhi (@RahulGandhi) October 9, 2018
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OMVlCX
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment