Wednesday, October 10, 2018

தமிழகத்தின் முதல் அடுக்குமாடி பேருந்து நிலையம் - திறந்து வைத்தார் முதலமைச்சர்

தமிழகத்தில் புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

127 கோடி ரூபாய் மதிப்பில் 471 பேருந்துகள் வாங்கப்பட்டன. புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய பேருந்தில் முதலமைச்சர் பழனிசாமி ஏறி, வசதிகளை பார்வையிட்டார்.

471 புதிய பேருந்துகளில், 60 பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளன. அவைகள் அனைத்தும் குளிர்சாதன, படுக்கை மற்றும் கழிவறை வசதிகள் கொண்டவை. மற்ற 411 பேருந்துகள் விழுப்புரம், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, கும்பகோணம் ஆகிய போக்குவரத்து கழகங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில், புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Classic Right sidebar முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி, edappadipalanisami, edappadi, tncm தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OVRa8d
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment