தெலங்கானா மாநிலத்தில் மீண்டும் ஒரு ஆணவப்படுகொலை நிகழ்ந்த சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த தடிக்கல் கிராமத்தைச் சேர்ந்த குமாரும், அதேப்பகுதியைச் சேர்ந்த சாயி தீபிகாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி, அவர்களது பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த 7ம் தேதி இரவு 9 மணிக்குப் பிறகு, குமார் காணவில்லை எனக்கூறி, அவரது பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இந்நிலையில், உடலில் பல இடங்களில் வெட்டப்பட்ட நிலையில் குமார், தனது கிராமத்தின் அருகிலேயே சடலமாக மீட்கப்பட்டார்.
இதையறிந்து துடித்துப்போய் அங்கு சென்ற சாயிதீபிகா குமாரின் சடலத்தின் அருகே கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது . பின்னர், இக்கொலைகுறித்து அறிந்த குமாரின் பெற்றோர்களும் உறவினர்களும் ஐதராபாத் - உசூராபாத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கேசவபட்டணம் போலீசார் விசாரணை நடத்தினர். முன்னதாக சாயி திபீகா குடும்பத்தினருக்கும் குமாருக்கும் இடையே மோதல் இருந்தநிலையில், அவரை சாயி தீபிகாவின் குடும்பத்தினர் கொலை செய்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
Classic Right sidebar தெலங்கானா, ஆணவப்படுகொலை, telangana தமிழகம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2INOPGw
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment