Tuesday, October 9, 2018

இந்தியாவின் நம்பர் ஒன் லைட்வெயிட் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் டீ-விற்கும் அவலம்

இந்தியாவின் நம்பர் ஒன் லைட்வெயிட் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் ராஜேஷ் குமார், டீ விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

பீகாரைச் சேர்ந்த 24வயதான இளம் குத்துச்சண்டை வீரர் ராஜேஷ் குமார். தொழில்முறை குத்துச்சண்டை வீரர் விஜேந்திர சிங்கை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இவர், தொழில்முறைப் போட்டியில் களமிறங்கியுள்ளார். 

ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இவர், அப்பா மற்றும் சகோதரியை புற்றுநோய்க்கு காவுகொடுத்துவிட்டார். அவர்களின் சிகிச்சைக்காக சொத்துக்களையும் விற்றுவிட்டார். இந்நிலையில், வேறுவழியின்றி தற்போது டீ விற்ற வருமானத்தில் அவருடன் அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். 

மதியம் ஒருமணி வரை டீ கடையிலும், அதன்பின் மாலை 6மணி வரை குத்துச்சண்டை பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். வறுமையை எதிர்த்துப் போராடும், ராஜேஷ்  தொழில்முறை குத்துச்சண்டை தரவரிசையில், இந்திய அளவில் முதலிடத்திலும், சர்வதேச அளவில் 221-வது இடத்திலும் இருக்கிறார்.

Classic Right sidebar குத்துச்சண்டை, ராஜேஸ் குமார், Professional Boxer, Rajesh Kumar சினிமா குத்துச்சண்டை, ராஜேஸ் குமார், Professional Boxer, Rajesh Kumar 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2CxMyyX
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment