வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஓடிஷா மாநிலம் கோபல்பூர் பகுதிக்கு 560 கிலோ மீட்டர் தொலைவிலும், கலிங்கப்பட்டினத்திற்கு 510 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலு பெற்று புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயலுக்கு TITLI என பெயரிட்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து கடும் புயலாக மாறக்கூடும் என எதிர் பார்க்கப்படுவதால், புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதே போன்று, வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதனால், நாகை துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. படகுகள் பாதுகாப்பாக கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
Classic Right sidebar Titli Cyclone, Pondichery, புயல் எச்சரிக்கை, புதுச்சேரி மாநிலம்from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OdLmaq
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment