உத்தர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரெலி மாவட்டத்தில் ஹார்ச்சன்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நியூ பராக்கா விரைவு ரயில் அதிகாலை புறப்பட்டது. 50 மீட்டர் தொலைவே சென்ற நிலையில் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 6 பயணிகள் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளன. மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லக்னோ மற்றும் வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம், காவல்துறையினருக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.



Classic Right sidebar Uttar pradesh, train accident, NDRF, ரயில் தடம் புரண்டு விபத்து, உத்தர பிரதேசம் இந்தியா
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2OgwUyx
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment