அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீராங்கனை மானு பாக்கர் தங்கப்பதக்கம் வென்றார்.
அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் இளையோர் ஒலிம்பிக் போட்டியின் 3-வது நாளில் மகளிருக்கான துப்பாக்கிச்சுடுதல் 10மீட்டர் ஏர் பிஸ்டர் பிரிவு போட்டி நடைபெற்றது. தங்கப்பதக்கத்திற்கு போட்டியிட்ட 7 வீராங்கனைகளில் இந்தியாவின் மானு பாக்கரும் இடம் பெற்றார்.
கொடுக்கப்பட்ட 2 சுற்றுகளில் 9 வாய்ப்பை நேர்த்தியாக பயன்படுத்திய மானு பாக்கர் 236.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். மானு பாக்கர் ஏற்கனவே, உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் மற்றும் காமன்வெல்த் தொடரில் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Classic Right sidebar இளையோர் ஒலிம்பிக், இந்தியா, தங்கம், அர்ஜெண்டினா, இந்திய வீராங்கனை, மானு பாக்கர், YouthOlympics, ManuBhaker, AsianGames, shoots, Gold, Pistol விளையாட்டுfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2A3AJ1j
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment