Tuesday, October 9, 2018

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: அக்.,22க்கு பிறகு தீர்ப்பு?

தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த வழக்கில், வரும் 22 ஆம் தேதிக்கு பிறகே சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூலை மாதம் துவங்கி, 12 நாட்கள் வழக்கறிஞர்கள் வாதம் நடந்தது.

இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் 3வது நீதிபதியான சத்திய நாராயணன் ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இன்று முதல் நீதிபதி சத்திய நாராயணன் விடுமுறையில் செல்வதாலும், 13ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை என்பதாலும்,  22ஆம் தேதிக்கு பிறகே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Classic Right sidebar 18 MLAS case, MLA Disqualification Case, TTV Dhinakaran, 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு அரசியல் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2QBRzd1
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment