Tuesday, October 9, 2018

குமரியிலிருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குமரி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குக் கடத்த முயன்ற 1000 கிலோ ரேஷன் அரிசி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 

குமரிமாவட்டம் குளச்சல் பகுதியில் மாவட்ட வருவாய்த்துறை தனிப்பிரிவு அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரமடி என்னும் இடத்தில் சந்தேகத்திற்குள்ளான வகையில் நின்றுகொண்டிருந்த சொகுசுகார், ஆட்டோ, இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் சோதனை செய்தனர். 

அப்போது காரில் இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியும், ஆட்டோவில் இருந்த 300 கிலோ ரேஷன் அரிசியும் கைப்பற்றப்பட்டது.  அப்போது வருவாய்த்துறை நடத்திய விசாரணையில், அரிசியை கேரளாவுக்குக் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. 
பின்னர், அரிசி காப்புக்காடு அரசு கிட்டங்கியிலும், வாகனங்கள் கல்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.மேலும் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Classic Right sidebar கன்னியாகுமரி, கேரளா, ரேஷன் அரிசி, Kanyakumari, Ration Rice, Kerala தமிழகம் கன்னியாகுமரி, கேரளா, ரேஷன் அரிசி, Kanyakumari, Ration Rice, Kerala 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2C8ZgDg
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment