Thursday, September 27, 2018

TANGEDCO தலைவர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் மின்பற்றாக்குறை நிலவுகிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு TANGEDCO தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காற்றாலை மின்சாரத்தை TANGEDCO எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பயன்படுத்தவில்லை என கூறி, தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மின் மிகை மாநிலம் எனக் கூறப்பட்ட தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் மின்பற்றாக்குரை நிலவுகிறதா என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இந்த கேள்விகளுக்கு நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மின்துறை செயலாளரும் TANGEDCO தலைவருமான முகமது நஸிமுதீனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Classic Right sidebar சென்னை உயர்நீதிமன்றம், TANGEDCO, Madras High Court தமிழகம் 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xUjvRB
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment