ஐ.பி.எல். போராட்ட வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசை, வரும் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.பி.எல். போராட்டத்தின் போது ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்தியது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது ஆகிய மேலும் 2 வழக்குகளில் கருணாஸ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்.
அப்போது,கருணாஸ் மீது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில், கொலை முயற்சி வழக்கினை மட்டும் நீதிபதி கோகுல்நாத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், ஐ.பி.எல். போராட்ட வழக்கில், கருணாசை வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, இந்த வழக்கில் ஜாமின் கோரிய கருணாசின் மனு மீது நாளை விசாரணை நடைபெறவுள்ளது.
Classic Right sidebar கருணாஸ், எம் எல் ஏ கருணாஸ், ஐபிஎல் போராட்ட வழக்கு, Karunas, MLA Karuanas, IPL Protest Case அரசியல்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2DB9miW
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment