வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர்.சி. ஹீரோவாக நடிக்கும் படம் படத்துக்கு இருட்டு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
முகவரி', 'தொட்டி ஜெயா', 'நேபாளி', '6 மெழுகுவர்த்திகள்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வி.இசட். துரை. இவருடைய '6 மெழுகுவர்த்திகள்' படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் 'ஏமாலி' படத்தை இயக்கினார். ஜெயமோகன் வசனம் எழுதிய இப்படம் பிப்ரவரி 2018-ல் வெளியானது.
இப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை.இந்நிலையில் சுந்தர்.சியை கதை நாயகனாக வைத்து இருட்டு என்ற படத்தை வி.இசட் துரை இயக்குகிறார். இதில் சுந்தர்.சி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது திகில் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் என இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் போது தெரிகிறது. கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு க்ரிஷ் இசையமைக்கிறார்.
ஸ்க்ரீன் சீன் மீட்யா என்டெர்டெயின்மென்ட் இருட்டு படத்தைத் தயாரிக்கிறது. விரைவில் கதாநாயகி குறித்த தகவல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கில் ஹிட்டடித்த ‘அத்தரண்டிகி தாரேதி’படத்தை தமிழில் சுந்தர்.சி ரீமேக் செய்கிறார்.
இதில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து விஷால்- தமன்னா நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்க உள்ளார். இதனிடையே வி.இசட் துரை இயக்கத்தில் சுந்தர்.சி நாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
Classic Right sidebar Iruttu, sundar C, இருட்டு, சுந்தர் சி சினிமாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R4Zfpi
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment