Thursday, September 27, 2018

இந்திய கடற்படை உதவியால் உயிர் பிழைத்தேன்..அபிலாஷ் உருக்கம்..!

இந்திய கடற்படை உதவியால் உயிர் பிழைத்ததாக மீட்கப்பட்ட கடற்படை வீரர் அபிலாஷ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கோல்டன் குளோப் எனப்படும் உலகத்தை தனியாக சுற்றிவரும் படகுப் போட்டியில் இந்திய கடற்படை வீரர் அபிலாஷ் டாமி (Abhilash Tomy)  கலந்துகொண்டு உலகை சுற்றும் சாகசத்தில் ஈடுபட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக மேற்கு ஆஸ்திரேலிய கடற்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரது படகு புயலில் சிக்கி காணாமல்போனது. 

காயமடைந்த டாமியை இந்திய கடற்படையும், சர்வதேச கடற்படையினரும் சேர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்டனர். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய கடற்பகுதியில் அமைந்துள்ள தீவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் அவரை சந்தித்த கடற்படை அதிகாரிகளிடம் பேசிய அபிலாஷ், தன்னை மீட்டது இந்திய கடற்படைதான் என்றும், அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Classic Right sidebar இந்திய கடற்படை, அபிலாஷ், Abhilash, Indian Navy இந்தியா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xJOj8e
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment