Thursday, September 27, 2018

இஷாந்த் சர்மா, அஸ்வினுக்கு உடல் தகுதி பரிசோதனை

இங்கிலாந்து தொடரின்போது காயமடைந்த பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு நாளை மறுநாள் உடல் தகுதி பரிசோதனை நடைபெற உள்ளது.

வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் அக்டோபர் 4-ஆம் தேதி ராஜ்கோட்டிலும், 2-வது டெஸ்ட் 12-ஆம் தேதி ஐதராபாத்திலும் தொடங்க உள்ளது.

இதனால், வீரர்களை தேர்வு செய்யும் பணியில் தேர்வுக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது பந்துவீச்சாளர்கள் இஷாந்த்சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

அதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வாக அவர்களின் உடல் தகுதி பரிசோதனை நடத்தப்பட இருக்கிறது. இருவருக்கும் வரும் 29-ஆம் தேதி உடல் தகுதி சோதனை நடைபெற உள்ளது.

Classic Right sidebar இஷாந்த் சர்மா, ரவிசந்திரன் அஸ்வின், கிரிக்கெட், பிசிசிஐ, BCCI, Cricket, Ishant Sharma, Ravichndran Aswin விளையாட்டு 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xFYYRB
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment