ஷங்கரின் ‘2.0’ மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ‘பேட்ட’ என 2 படங்கள் ரஜினி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இதில் ‘பேட்ட’ படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
அனிருத் இசையமைக்கும் இதற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். ரஜினியின் 165-வது படமான இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட மாஸான ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்கப்பட்டு வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இப்படத்தின் ஷூட்டிங் லக்னோவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, ஷூட்டிங்கில் நடிகை மேகா ஆகாஷும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை மேகா ஆகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியதோடு, ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கு முன்னதாக நவம்பர் மாதம் ஷங்கரின் 2.0 படம் திரைக்கு வரவுள்ளது.
Classic Right sidebar ரஜினிகாந்த், மேகா ஆகாஷ், பேட்ட, சினிமா, Rajinikanth, Megha Akash, Petta சினிமாfrom Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2R35ERJ
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment