நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவரான 'குத்து' ரம்யா, ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 24ம் தேதி மோடியை திருடன் என விமர்சித்து, சர்ச்சைக்குரிய புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு ரம்யா பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் ரம்யாவுக்கு எதிராக தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இதற்கெல்லாம் அச்சப்படாத அவர், தற்போது வெளியாகியுள்ளள “தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்” படத்தின் டிரைலரில், நடிகர் அமீர்கான் பேசிய “நம்பிக்கை துரோகம் என்பது எனது சுபாவம்” என வசனத்தை பதவிட்டு, ரபேல் விவகாரத்தில் மோடியை மீண்டும் விமர்சனம் செய்துள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில், ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்திற்கு மோடி நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாகவும் ரம்யா விமர்சனம் செய்துள்ளார். அவரது டுவிட்டர் விமர்சனம், சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Classic Right sidebar Congress, Ramya, Modi, ரம்யா, காங்கிரஸ், மோடி அரசியல்
from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2N7at9g
via Rinitha Tamil Breaking News
No comments:
Post a Comment