Thursday, September 27, 2018

நானா படேகர் மீது இளம் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார்..!

காலா படத்தில் வில்லனாக நடித்த நானா படேகர் மீது இளம் நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கொடுத்திருப்பது பாலிவுட் வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.

நடிகை தனுஸ்ரீ தத்தா விஷால் நாயகனாக நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக பிரகாஷ் ராஜின் தங்கையாக நடித்திருந்தார், முன்னதாக பாலிவுட்டில் சில படங்களில் நடித்து பிரபலமான இவர் 10 ஆண்டுகளுக்கு முன் ‘ஹான் ஓகே ப்லீஸ்’ என்ற படத்தில் நடிக்கும் போது அவருடன் நடித்த நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக தாக்கியதாகவும் இந்த விவகாரம் தெரிந்திருந்தும் படகுழுவினர் அவரை எதும் கேட்கவில்லை எனவும் தற்போது புகார் அளித்துள்ளார். 

மேலும் நானா படேகர் பற்றியும் அவர் நடிகைகளை எப்படி நடத்துவார் எந்த நோக்கத்தில் பழகுவார் என்றும் அவரின் பின்புலம் குறித்தும் அனைவருக்கும் தெரியும். இருந்தும் எந்த நடிகரும், நடிகைகளும் ஊடகங்களின் முன் சொல்ல, முன் வராததால் இதுநாள் வரையில் அவரின் சுயரூபம் மக்களுக்கு தெரியாமல் இருந்துள்ளது என்றும் தனுஸ்ரீ கூறியுள்ளார். 

இந்த செய்திகள் வட இந்தியா முழுவதும் தீப்போல் பரவி ஊடகங்களில் விவாதத்துக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் பலரும் இதற்கு நானா படேகரின் பதில் என்ன என்பதை எதிர் நோக்கி காத்திருக்கின்றனர்.

 

Classic Right sidebar Tanushree Dutta, Nana Patekar, தனுஸ்ரீ தத்தா, நானா படேகர்,  பாலியல் புகார், sexual harassment சினிமா 100

from Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube blogs https://ift.tt/2xUiedh
via Rinitha Tamil Breaking News

No comments:

Post a Comment